அம்மாவை பார்க்க 480 கிமீ சைக்கிளில் வந்த மகன் !! தாயை பார்த்த சில நிமிடத்தில் நடந்த சோகம் !!

உடல்நிலை சரியில்லாத தாயை பார்க்க மகன் 480 கிலோமீற்றர் சைக்கிளில் வந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.புதுச்சேரியை சேர்ந்தவர் பெயிண்டர் ரேவு ஸ்ரீனி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவரும் தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் இருக்கும் தனது தாய் மகாலட்சுமி புற்றுநோயினால் அவதிப்பட்டு இருந்தநிலையில், உறவினர்கள் ரேவுவிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பேருந்து, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள் இல்லததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார்.பின்பு தெலுங்கானாவில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்து, ரேவு ஸ்ரீனியும், அவரது மனைவியும் தனித்தனியாக சைக்கிள் பயணத்தை கடந்த 14ம் திகதி தொடங்கியுள்ளனர்.

இடையே விசாரித்த பொலிசாரிடம் தாயின் உடல்நிலை குறித்து கூறி அவர்களின் உதவியுடன், ஆங்காங்கே கிராமங்களில் மக்கள் கொடுத்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் சுமார் 480 கிலோமீற்றர் பயணம் செய்து கடந்த 17ம் திகதி நள்ளிரவு புதுச்சேரி வந்துள்ளனர். அங்கு அவர்களை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தி வைத்தனர்.

பின்னர் 18ம் திகதி தாயை பார்க்க அனுமதி அளித்ததும், ரேவு ஸ்ரீனி தாயைப் பார்த்துள்ளார். தனது மகனை பார்த்த சில நிமிடங்களில் தாய் மகாலட்சுமியின் உயிர் பிரிந்துள்ளது.

இதனை அடுத்து சோகத்துடன் தாயின் இறுதிச்சடங்கை முடித்து, பின்னர் தனது மனைவியுடன் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாமிற்கு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept