ஆர்யாவை போலவே இருக்கும் அவரது தம்பியை பார்த்திருக்கீங்களா ?? படத்துல கூட நடிச்சிருக்கார் !! குடும்ப புகைப்படம் இதோ !!

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், ஆர்யா. ‘அறிந்தும் அறியாமலும்,’ ‘நான் கடவுள்,’ ‘ராஜா ராணி,’ ‘இஞ்சி இடுப்பழகி,’ ‘அவன் இவன்,’ ‘மதராசபட்டினம்,’ ‘இரண்டாம் உலகம்,’ ‘வேட்டை’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் கடந்த வருடம் நம்ம வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினார்.பின்னர் தன்னுடன் கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த சாயிசாவை திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய தம்பி ஷாகிர், ‘சத்யா’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு, ‘புத்தகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, ‘அமரகாவியம்’ படத்தில், கதாநாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்தார். அடுத்து, ‘எட்டுத்திக்கும் மதயானை,’ ‘சந்தன தேவன்’ ஆகிய படங்களில், சத்யா நடித்தார்.

சத்யா அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாவனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்கள் இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே காதலித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிக பேருக்கு ஆர்யாவின் தம்பி சத்யா பற்றி தெரியவில்லை.தற்போது அவரது குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept