அந்த படத்தில் நடித்ததுதான் நான் செய்த முதல் தப்பு !! நயன்தாரா ஆவேசம் !!

Google+ Pinterest LinkedIn Tumblr +

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தான் நடிக்கும் படத்தில் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ளமாட்டார்.நடிகர் அஜித்தின் பாணியை பின்பற்றுவதாக இவர் கூறியுள்ளார்.தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், நயன்தாரா பேட்டி என்பது அரிதினும் அரிதானது. சமீபத்தில் பிரபல ஆங்கில இதழான ‘வோக்‘ இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில், வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்த நயன்தாரா கூறியதாவது, ’தனது கேரியரில் செய்த மிகப் பெரிய தவறு சூர்யாவின் கஜினியில் நடித்ததுதான். அந்தப் படத்தில் சித்ரா என்ற மருத்துவ மாணவி கேரக்டரில் நடித்திருந்தேன்.

அந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, ஹீரோயின் அசினுக்கு இணையான வேடம் என கூறப்பட்டது. ஆனால், படத்தில் எனது கேரக்டரை வேறுவிதமாக எடுத்துவிட்டார்கள். அதற்கு பிறகுதான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நயன்தாராவின் இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜினி படத்தை இயக்கிய முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நயன் தாரா ஹீரோயினாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

Share.

About Author

Leave A Reply