இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர்தானாம்.. ஆனால்!! ட்விஸ்ட் என்ன தெரியுமா..?

Google+ Pinterest LinkedIn Tumblr +

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்க்குள் வனிதா விஜயகுமார் வந்ததிலிருந்தே பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டது. வனிதா விஜயகுமார் வந்த வேலையை சரியாக செய்துள்ளார் என்பது போன்றே இருந்தது. அபிராமி, முகின் ராவ் பிரச்சனை ஓய்ந்து தற்போது மதுமிதா, கவின் பிரச்சனை ஆரம்பமானது அதற்கும் பிள்ளையார் சுழி போட்டவர் வனிதா விஜயகுமார்தான். கஸ்தூரியே வனிதா விஜயகுமாரை பார்த்து கொஞ்சம் பயந்துதான் இருக்கிறார் எனலாம். அந்த அளவிற்கு கெத்தாக இருக்கிறார் வனிதா.

ஆனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு யார் வெளியேறுவார்கள் என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழுந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டுட்டு வெளியேறுவது மதுமிதாதான் என்று உறுதியாக தெரிகிறது. ஏனென்றால் வோட்டிங் லிஸ்டில் மதுமிதாவிற்கே குறைவான வாக்குகள் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தேவையில்லாத பிரச்சனைகளை மதுமிதா செய்வதால் இந்த நிலை. ஆனால் அதிலும் பிக்பாஸ் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். மதுமிதாவை எலுமினேட் செய்யாமல் சீக்ரட் ரூமில் பிக்பாஸ் வரவைத்துவிடுவார் என்று கூறப்படுகிறது. ஆக மதுமிதா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினாலும் சீக்ரட் ரூமிற்க்கு செல்வதால் காப்பற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.

நேற்று பிக்பாஸ் வீட்டில் சண்டை ஓய்ந்த பாடில்லை. வனிதா இருக்கும் வரை போட்டியாளர்களிடையே சண்டை அதிகமாகிக்கொண்டே தான் செல்கிறது. இது ஒருபுறம் இருக்க சம்பந்தமே இல்லாமல் மதுமிதா எல்லோருடனும் சண்டை இடுகிறார். முக்கியமாக கவினுடன் எதற்கு சண்டை போடுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால் கவினுடன் மதுமிதா சண்டை போடும்போதெல்லாம் லொஸ்லியா கவினுக்கு துணையாக வருகிறார்.

இன்றும் அதேபோல லொஸ்லியா கவினுக்கு சப்போர்ட் செய்யும் போது மதுமிதாவை சரமாரியாக திட்டி தீர்த்துள்ளார் லொஸ்லியா. மதுவை பார்த்து இவ்வளவு நாள் என்ன வேற்று கிரகத்துலையா இருந்து வந்தீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு மதுவை ஆப் செய்துள்ளார். இன்று வெளியான ப்ரோமோவில் மதுமிதாவை வீட்டில் உள்ள அனைவரும் டார்கெட் செய்ய வாய்ப்புள்ளது. ஏனென்றால் வனிதா வீட்டில் இல்லை இதுதான் உண்மை. இதோ அந்த புதிய ப்ரோமோ வீடியோ.

 

Share.

About Author

Leave A Reply