இளசுகளின் கனவுக்கன்னியாக மாறிய இலங்கை பெண்! ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? மகிழ்ச்சியின் உச்சத்தில் ஈழத் தமிழர்கள்

0

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கினாலும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே மிகப்பெரிய சர்ச்சைகள் நடந்துகொண்டு உள்ளது. குறிப்பாக வனிதா மகள் பிரச்னை, போலீஸ், கேஸ், இப்படி. இதையெல்லாம் மறக்கும் விதமாக அவ்வப்பொழுது அங்கே சில குளு குளு நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் உள்ளது. குறிப்பாக இலங்கை தமிழச்சி(?) லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு இளசுகளுக்கு ஒரே குஷிதான். கடந்த சீசனில் ஓவியா ஆர்மி ஆரம்பித்தது போல இப்பொழுது அவர் போட்டியில் கலந்து கொண்டதுமே உடனே இளசுகள் லாஸ்லியா ஆர்மி ஆரம்பித்துவிட்டனர்.

இவர் தமிழகத்திற்கு அதிகம் பரிச்சயமில்லாத போதும் ரசிகர்களை தன் பக்கம் தன்னுடைய அழகு, நடவடிக்கைகள் மூலம் வெகுவாக கவர்ந்துள்ளனர். லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்குள் சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், அவரின் விதவிதமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. அதே போல இவரது ஆர்மிகளும் உடனுக்குடன் அப்டேட்டுகளை தவறாமல் வெளியிட்டு வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக ஒரு சுவாராஸ்யமான நிகழ்வும் நடந்தேறியுள்ளது. ஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு பேனர் எல்லாம் அமைத்து அதன் முன்னே பாலபிஷேகம் செய்து, மேல தாளத்துடன் ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதேசமயம், பரீட்சயமில்லாத ஈழத்து பெண் ஒருவர் இப்படி ரசிகர்களை பெற்று கொண்டதை எண்ணி ஈழத் தமிழர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Share.

About Author

Leave A Reply