என்னது ‘சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கும் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு இப்படியொரு உறவுமுறையா…? அட உண்மையா தாங்க

லெஜண்ட் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சிக்கும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுக்கும் நெருங்கிய உறவுமுறை இருப்பது தெரியவந்துள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருளை தெரியாதவர்கள் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை அந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் தனது விளம்பரத்தால் பிரபலமாகியுள்ளார். அடுத்து திரைப்படத்துறையிலும் கால் பதிக்க இருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சென்னை வந்த சரவணன் அருளின் தந்தையும், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனருமான சரவணா செல்வரத்தினம், கடுமையாக உழைத்து சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி கடையை உருவாக்கினார். நல்ல நிலைக்கு வந்ததும் தனது சகோதரர்களான யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினத்தை சென்னைக்கு அழைத்துவந்து தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார்.

அவர் இறந்த பிறகு சகோதரர்களுக்குள் சண்டை வந்ததால் சொத்துக்கள் பிரிக்கப்பட்டது. தற்போது லெஜெண்ட் சரவணா என்ற பெயரில் சரவணன் அருள் நடத்தி வருகிறார். இவர் ஆரம்ப காலத்தில் விளம்பரங்களில் நடித்தபோது பல விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்குமே திருமணமாகிவிட்டது.

சரி அதெல்லாம் தெரிந்த விஷயங்கள் தான். லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருளின் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசையும் நெருங்கிய ரத்த சொந்தமாம். தமிழிசையின் தாயார், அருள் மனைவியின் தாயாருக்கு சின்னம்மாள் உறவுமுறை. அதாவது தமிழிசைக்கு அருள் மனைவி அக்காள் மகள் உறவு. அருள் அண்ணாச்சிக்கு தமிழிசை மாமியார் உறவுமுறையாம்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept