என் வாழ்நாளில் அவருக்கு நான் அதை மட்டும் செய்யவே மாட்டேன்..! டிடி ஓபன் டாக்..!

Google+ Pinterest LinkedIn Tumblr +

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக திகழ்ந்து வருபவர் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். இவர் கடைசியாக “என்கிட்ட மோததே” என்ற ஷோவை தொகுத்து வழங்கினார். கடந்த 15 வருடத்திற்கும் மேலாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். இவர்தான் அதிக ஷோக்களை தொகுத்து வழங்கிய தமிழ் தொகுப்பாளினி என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

டிடிக்கு பல சினிமா பிரபலங்கள் நண்பர்களாக இருந்து வருகின்றனர். டிடி பல சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். டிடிக்கு இரண்டு வருடத்திற்குமுன் திருமணமாகி அதன்பின் விவாகரத்தும் ஆகியது. தற்போது டிடி மறுமணம் செய்துகொள்ளாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியை செய்துவருகிறார்.

இந்நிலையில் டிடியிடம் ஒரு பேட்டியில் “நீங்கள் பேட்டி எடுத்ததில் கஷ்டமான மற்றும் பேட்டி எடுக்கவே கூடாத பிரபலம் யார்” என்று கேட்கப்பட்டதற்கு டிடி கூறியதாவது “நான் பேட்டி எடுத்ததிலேயே கடிமான பிரபலம் மற்றும் பேட்டி எடுக்ககூடாத பிரபலம் இயக்குனர் மிஸ்கீன்தான் ஏனென்றால் மிஸ்கீன் முதலில் நன்றாக பேசுவார் அதன்பின் கோபமாகிவிடுவார்” என்று டிடி திகைப்புடன் பேட்டியளித்துள்ளார்.

Share.

About Author

Leave A Reply