ஒரே இரவில் கோடீஸ்வரரான ஏழை தொழிலாளி !! கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்குறதுனா இதுதானா ?? இன்ப அ தி ர்ச்சியில் குடும்பம் !!

சுரங்க தொழிலாளி ஒருவர் இரண்டு கற்கள் மூலமாக ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தான்சானியா நாட்டை சேர்ந்த சுரங்க தொழிலாளியான சானினியு லைசர் என்பவர் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இரண்டு ‘டான்சனைட்’ எனப்படும் ரத்தினக்கற்களை கண்டுபிடித்துள்ளார்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரத்தினக்கற்களில் இது மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது.

ஒரு ரத்திக்கல்லின் எடை 9.27 கிலோவும், மற்றொன்றின் எடை 5.8 கிலோவும் இருந்துள்ளது. இந்த ரத்தினக்கற்களுக்கு அந்நாட்டு அரசு 7.74 பில்லியன் தான்சானியன் ஷில்லிங்ஸ் அவருக்கு கொடுத்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 25 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இதுகுறித்து தெரிவித்த சுரங்க தொழிலாளி சானினியு லைசர், ‘எனக்கு கிடைத்த இந்த பணத்தை வைத்து ஷாப்பிங் மால் மற்றும் பள்ளியை கட்ட விரும்புகிறேன். எனது வீட்டிற்கு அருகிலேயே இந்த பள்ளியை கட்ட விரும்புகிறேன்.

குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாத ஏழ்மையான குடும்பங்கள் இப்பகுதியில் அதிகமாக உள்ளனர். நான் படித்தவன் கிடையாது. அதனால் இதை எல்லாம் என் பிள்ளைகள் முன்னெடுத்து நடத்த வேண்டும் என விரும்புகிறேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் வைரலானதினை தொடர்ந்து இணையத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept