கமலின் குடும்ப புகைப்படத்தில் இடம்பிடித்த விவகாரம் !! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார் !!

Google+ Pinterest LinkedIn Tumblr +

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் இன்று 65 வது பிறந்தநாளை சொந்த ஊரான பரமக்குடியில், குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். குடும்ப புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் இடம் பிடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையில் தங்களது தாயாருடன் வசித்து வரும் கமல்ஹாசன் மகள்களான ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோர்களும் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த அனைவரும் தற்போது பரமக்குடியில் உள்ளனர். அதேபோல் இயக்குனர் மணிரத்னம் மனைவியும் சாருஹாசன் மகளுமான சுஹாசினியும் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி சமீபத்தில் பேட்டியளித்த பூஜா குமார், ”கடந்த 5 வருடமாக நான் கமலுடன் பணியாற்றி வருகிறேன். அவரை போன்ற ஒரு சிறந்த படைப்பாளி யாரும் இருக்க முடியாது. அவர் ஒரு மேஜிக் மேன், அவருக்கு இறைவன் நம்பிக்கை இல்லை என்றாலும் அவரிடம் தொழில் பக்தி நிறைந்திருக்கிறது.

எந்த ஒரு சின்ன விஷயத்தையும் அதிக கவனத்துடன் கையாள்வார். எனக்கு எப்படி பொறுமையாக இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்ததே அவர் தான். எந்த ஒரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை மிகச் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்”.

 

Share.

About Author

Leave A Reply