கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், கைதான நிர்மலா தேவி தலை விரி கோலத்தில் சுற்றிய காட்சி ! – புகைப்படம் உள்ளே..!

0

வேலியே பயிரை மேய்வது போல, பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையே மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி கைதானது தெரிந்தது. அதன் பிறகு அவர் அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதிலிருந்து தவறாமல் நீதி மன்றத்தில் ஆஜராகி வருகிறார். தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது போல அவர் மனதால் வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

குடும்பத்தில் தன்னைப் பற்றிய மதிப்பீடு குறைந்திருந்த நிலையில் நேற்று நீதிமன்றத்திற்கு வந்த அவர், அங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். மேலும், தன்னை கணவனும் குடும்பத்தினரும் வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டார். அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள தர்கா ஒன்றிற்குச் சென்றார்.

அங்கு குழந்தைகளுக்கு மந்திரிக்கும் பகுதிக்கு சென்ற அவர் தரையில் அமர்ந்து, தலைவிரி கோலமாக கண்களை மூடிக் கொண்டு தனக்குத்தானே புலம்பிகொண்டிருந்துள்ளார். இதை கவனித்த தர்காவினர் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், நிர்மலாதேவியை எழுந்துபோக கூறினர். நிர்மலாதேவி எழுந்து செல்லாததால், போலீசார் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தனர்.

அங்கிருந்து வெளியேற பிடிவாதம் பிடித்த பேராசிரியை, ஒரு கட்டத்தில் அங்கிருந்து நகராததால் போலிசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கி தர்காவிற்கு வெளியே விட்டனர். செய்த தவறுகளை நினைத்து மனநிலை பாதிக்கப்பட்டவர் போல அவர் காணப்பட்டார். தாயாக இருக்க வேண்டிய இடத்தில் உள்ள ஆசிரியை இப்படி தகாத செயல்களில் மாணவிகளை ஈடுபடுத்தியதால் அவருக்கு கடவுள் கொடுத்த கிடைத்த தண்டனைபோல அந்த காட்சி இருந்தது.

Share.

About Author

Leave A Reply