காலை வைக்குற எடமாய்யா அது? வைரலாகும் அட்லி மனைவியின் புகைப்படம்! ஆனா அது அட்லி இல்லையாம்..!

0

தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் திரைப்படம் “பிகில்”. தற்போது இந்த அப்படத்திற்குத்தான் அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விஜய் படம் என்றவுடன் மக்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதும். விஜயை வைத்து மூன்றாவது முறையாக இயக்கம்அட்லீக்கு இது தனி பெருமையே. தனது முதல் படமான “ராஜா ராணி” மட்டுமே அட்லீ வேறொரு நடிகரை வைத்து இயக்கிய திரைப்படம். அதன்பின் அவர் எடுத்த மூன்று படங்களுமே தளபதி விஜயை வைத்துதான். விஜய்க்கும் அட்லீ என்றாலே தனி பிரியம் என்று கோடம்பாக்கத்தில் கிசு கிசுகின்றனர்.

அட்லீ, நடிகை ப்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் எந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தாலும் ஒன்றாகவே வருவர். தற்போது அட்லீ பிகில் படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அட்லீயின் மனைவி ப்ரியா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவர் அந்தரத்தில் பறந்தபடி வேறொருவருடன் யோகா செய்துகொண்டிருக்கிறார்.

இணையத்தில் இந்த புகைப்படம்தான் வைரலாகி வருகிறது. அட்லீ மனைவி பிரியாவுடன் இருக்கும் அந்த நபர் பிரபல யோகா மாஸ்டராம். ஆவர் பெயர் வைபவ்.

Share.

About Author

Leave A Reply