கீர்த்திசுரேஷ் உடம்புக்கு எதுவும் பிரச்னையா? குழப்பத்தில் ரசிகர்கள்.. எப்படி இருந்த கீர்த்தி இப்படி ஆகிட்டார்… நீங்களே போட்டோ பாருங்க..!

Google+ Pinterest LinkedIn Tumblr +

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் விஜய் தனுஷ், விஷால், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார், இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் பக்கம் சென்றதால் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார் சமீபத்தில் இவரின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் ஒல்லியாக இருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான “நடிகையர் திலகம்” திரைப்படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்து அனைத்து ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது கீர்த்தி சுரேஷ் உடலை குறைத்து ஒல்லியாக உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் உள்ளது கீர்த்தி சுரேஷ்தானா என்று ரசிகர்கள் வியப்பில் உள்ளனர். சர்க்கார் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தற்போது நடித்து வரும் “பென்குயின்” என்ற திரைப்படம் மட்டுமே கீர்த்தி சுரேஷ் கைவசத்தில் உள்ளது. இந்த படம் 2020 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.

About Author

Leave A Reply