சிறிய தொட்டி முழுவதும் தண்ணீர் நிரப்பி அதற்குள் குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள்..! ஏன் தெரியுமா..? வெளியான திடுக்கிடும் தகவல்..!

சங்க காலத்திலிருந்து நவீன உலகம் வரை பிரசவம் பார்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. காலத்திற்கு ஏற்றவாறு வழிமுறைகளும் மாறிவருகின்றன. இந்நிலையில் புது வகையான பிரசவம் ஒன்று நம் அண்டை நாடான இலங்கையில் அரங்கேறியுள்ளது.

நம் நாட்டில் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவை வீட்டிலேயே கொண்டு வந்து வழங்குவதற்காக ஸ்விக்கி, சோமேடோ மற்றும் டுன்ஸோ ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களை போன்று இலங்கை நாட்டில், “பிக் மை ஃபுட்” (pick my food) என்று நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் மேவின் பீரிஸ் என்பவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அவரை அந்நாட்டின் தலைநகரான கொழும்புவில் உள்ள பிரபல மருத்துவமனையான “நைன்வெல்ஸ்” மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த மருத்துவமனையில் புது வழியாக தண்ணீரில் பி ரசவம் பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறையில் மேவின் பீரிஸின் மனைவிக்கு பி ரசவம் பார்க்கப்படுகிறது.

வெற்றிகரமாக முடிந்ததாகவும் தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.இலங்கை நாட்டில் முதன்முதலாக தண்ணீரில் பி ரசவம் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept