சினிமா பாணியில் ஆண்களை மயக்கி பல லட்சம் சுருட்டிய கில்லாடி பெண் !! இப்படியுமா ஏமாறுவாங்க ?? அடக்கொடுமையே !!

0

கடலூர் மாவட்டம் வளையமாதேவியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பாலமுருகன் (35), பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, தற்போது வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் தேடலில் இறங்கியிருக்கிறார். பாலமுருகனின் பெற்றோர் அவருக்கு பெண் பார்த்து வந்த நிலையில், அவரே வரன் தேடி தமிழ் மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.

அந்த மேட்ரிமோனியல் தளத்தில் பாலமுருகனின் புகைப்படம் மற்றும் தொழில், வருமானம் குறித்த விவரங்களைப் பார்த்த, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த மேனகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், அவருடைய செல்போன் எண்ணுக்கு தன்னுடைய எண்ணில் இருந்து, ‘உங்கள் புரஃபைல் விவரங்கள் பிடித்திருக்கிறது. பேசலாமா?’ என்ற கேள்வியுடன் பதிலை தட்டிவிட, பாலமுருகனும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

எறும்பு ஊற கல்லே தேயும்போது களிமண் பாலா, மேனகாவின் வாஞ்சையான பேச்சில் கரைந்தே போனார். தந்தையை இழந்த பெண்; தன் மீது பாசம் காட்டுகிறாள் என்பதால், அவரை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்தார் பாலமுருகன். மேட்ரிமோனியல் தளத்தில் மேனகா, தான் கோவையில் உள்ள அம்பாள் மோட்டார்ஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பதாகவும், எம்பிஏ படித்திருப்பதாகவும், 5 லட்சம் ஊதியம் என்ற விவரங்களையும் பதிவு செய்திருந்தார்.

இந்த விவரங்களும், பாலமுருகனுக்கு மேனகா மீது நல்ல மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில்தான், மேனகா தன் குடும்ப கஷ்டங்களைச் சொல்லி என்னிடம் அடிக்கடி பணம் கேட்க ஆரம்பித்துள்ளார்.

கோவையில் மேனகா இருக்கும்போது ஊட்டி,சென்னை, கொடைக்கானல், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு அலுவலக ஊழியர்களுடன்பயிற்சிக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்று விடுவார். அதனால் என்னை கோவைக்கு வர வேண்டாம் என்பார்.அந்த நாள்களில் அவர் கரூர் சிவக்கொழுந்து,பல்லடம் ஆனந்த், ஈரோடு குணசேகர்,கோவை ஸ்ரீதர் திருப்பதி, கணபதி உள்ளிட்ட 17 பேருடன் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளதை பின்னாள்களில் கண்டுபிடித்தேன்.

இதையெல்லாம் கண்டுபிடித்து கேட்டபோது,‘ஆமாம்… நான் ஒரு விலைமாதுதான். நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ. உன்னால் ஒரு மயிரும் ….. முடியாது,’ என்றார். எனக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது. அவருடைய அழுகை, குடும்ப கஷ்டம் என்ற நடிப்பை நம்பி ஏமாந்து வீட்டு உபயோகப் பொருள்களில் இருந்து தங்கம்,வைர நகைகள் என இதுவரை 35 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன்.

அவர் அடகு வைத்திருந்த நகைகளைக்கூட மீட்டுக் கொடுத்திருக்கிறேன். என்னை மாதிரி பலரிடம் அவர் திருமணம் செய்வதாகக்கூறி 85 லட்சம் வரை பணம் வாங்கி ஏமாற்றியிருக்கிறார்.ஆனால் இதில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களிடம் கேட்டபோது அவர்கள் அப்படி எதுவும் கிடையாது நானும் மேனகாவும் நண்பர்கள்தான் என சொல்லிவைத்தாற்போல் ஒரேமாதிரி சொல்கிறார்கள்.

இதுகுறித்து பாலமுருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பாலமுருகன் புகார் அளித்தபோதே, ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து இருந்தால், ஒரு பெண்ணின் நிர்வாணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது தடுக்கப்பட்டிருக்கலாம். வழக்கம்போல் அலட்சியம் செய்திருக்கிறது சேலம் மாவட்ட காவல்துறை. பல மாதங்கள் கழித்து, திடீரென்று பாலமுருகனிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறி மே 24, 2019ம் தேதியன்று சேலம் ஊரக டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகும்படி அழைத்திருக்கிறது காவல்துறை. எங்கே விசாரணை என்ற பெயரில் அழைத்து, தன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தலைமறைவாகிவிட்டார் பாலமுருகன்.

Share.

About Author

Leave A Reply