சொல்ல முடியாத இடத்தில் கணவர் பெயரை பச்சை குத்திய நடிகை சமந்தா ! போட்டோ ஷூட்டின்போது வெளியான ரகசியம் ! புகைப்படம் உள்ளே !

0

நம்ம நயன்தாராவுக்கு அடுத்தபடியா தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது சமந்தா தான். ஏனென்றால் இவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹீட். வசூலை அள்ளி குவித்தவை. இவருக்கென்று உலகளவில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது படம் வெளியாகிவிட்டால் உடனே அதை திரையங்கிற்கு சென்று முதல் காட்சி பார்த்துவிட்டுதான் மறு வேலை என்று இருக்கும் தீவிர ரசிகர்கள் பட்டாளங்கள் ஏராளம்.

அந்தளவிற்கு சினிமாவில் தனித்துவம் பெற்றிருந்த இவர் நாகார்ஜுனா மகனான நாகசைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திறகுப் பிறகு கூட நடிப்பதை விடவில்லை. பல படங்களில் நடித்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நாயகிதான் சமந்தா.

தற்போது சமந்தா தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சமந்தா சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் மஜிலி. இந்த திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான  “ஓ பேபி” திரைப்படம் கூட வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், “மஜிலி” படத்தின் சக்ஸஸ் மீட்டிங் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அந்த திரைப்பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட சமந்தா வெள்ளை நிற உடையில் வந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்தார்.  விழாவிற்கு முன்பு நடத்தப்பட்ட போட்டோஷீட்டில் எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் இதுவரை மறைத்து வைத்திருந்த ரகசியம் வெளிப்பட்டுள்ளது. தெரிந்தோ தெரியாமலோ புகைப்படத்தில் அந்த ரகசியம் வெளியாகிவிட்டது. அதாவது அவருடைய கணவர் நாக சைதன்யாவின் பெயரை தன் இடுப்பிற்கு மேலே பச்சை குத்தியுள்ளார். அது புகைப்படத்தில் வெளியாகி இப்போது இணைய வெளியில் வைரலாகி, சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் கணவர் பெயரை பச்சை குத்த இந்த சமந்தாவிற்கு வேற இடம் கிடைக்கலியா? என்று கேலி கலந்து கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த படம் உங்களுக்காக.

 

Share.

About Author

Leave A Reply