திருமண நேரத்தில் ஓடிப்போன மணமகன் – மாமனாரை திருமணம் செய்து கொண்ட மணமகள்! மணப்பெண் கூறிய காரனத்த கேட்டா அதிர்ந்து போவீங்க!

0

தற்போது சமூக பிரச்சனைகளை விட உறவு சார்ந்த பிரச்சனைகள் தான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளசுகள் காதல் விவகாரங்களை பெரும்பாலூம் தற்போது கையில் எடுத்து ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த வயதான முதியவர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை சிலநேரம் ஏற்படுத்துகிறது, இப்படி தனக்கு மருமகளாகப்போகும் பெண்ணையே மாமனார் திருமணம் செஎய்த செய்தி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மாமனாரை மருமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவரின் மகனுக்கும் சுவப்ணா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமண சமயத்தில் தான் காதலித்து வந்த பெண்ணுடன் மணமகன் ஓடிபோய்விட்டார்.இதனால் திருமண வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் அடைந்தனர்.

இதையடுத்து தனது கெளரவம் கெட்டுவிடக்கூடாது என சுவப்ணாவின் தந்தை அதிர்ச்சி முடிவை எடுத்தார்.அதன்படி தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார்.மணப்பெண் சுவப்ணாவும் வேறு வழியின்றி ரோஷனை திருமணம் செய்து கொண்டார். மேலும் மணப்பெண்ணிடம் மாப்பிள்ளை வீட்டார் கேட்டதற்கு தனது அப்பாவின் மற்றும் எனது குடும்பத்தின் கௌரவம் தான் முக்கியம் இவரே என் கணவர் என திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.

Share.

About Author

Leave A Reply