நடிகர் சரவணனுக்கு ஏன் 2 வது திருமணம்? முதல் மனைவி சொன்ன நெகிழ்ச்சி காரணம் !

0

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்தக் கதை, சோக கதையை பகிர்ந்தனர். அதில் பருத்தி வீரன் சித்தப்பு, தனக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், அதை தன்னுடைய மனைவியே முன்னின்று நடத்தியதாகவும் கண்ணீர் மல்க கூறியிருந்தார். அதை உண்மையாக்கும் வகையில் அதுபற்றி அவருடைய முதல் மனைவி பிரபல தமிழ் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் அது பற்றி கூறியுள்ளார்.

அதில் அவர், ’நாங்கள் இருவரும் அடையர் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தோம், அப்போது காதலித்தோம், எங்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது. பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டோம். அதன் பின் எங்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்டோம்.

குழந்தை பேறு அடைவதற்கு நான் எவ்வளவோ சிகிச்சை பெற்றும் அந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவரது குடும்பத்தினர் திடீரென இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தினர். குழந்தையின்மையால் வாடி போயிருந்த நானும் அவருடைய நலனுக்காக இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து அதை  நடத்தி வைத்தேன்.

இரண்டாவது மனைவிக்கு இப்போது குழந்தை உள்ளது. அது எனக்கும் மகிழ்ச்சியை கொடுத்து. இரண்டாவது மனைவி வந்த பிறகும் கூட எனது கணவர் என் மீது மாறாத பாசத்துடன் தான் இருக்கிறார். அவர் மீது இருந்த காதல் எனக்கு இம்மியளவு கூட குறையவில்லை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிக மிக நல்லவர் என கண்ணீர் மல்க நெகிழ்ச்சியாக கூறினார்.

Share.

About Author

Leave A Reply