நடிகர்! தொழில் அதிபர்! டான்ஸ் மாஸ்டர்! இப்போது எடிட்டர்! வனிதாவின் கடந்தகால கணவர்கள் ஒரு பார்வை!

நடிகை வனிதா கடந்த 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஆகாஷ் சமுத்திரம், தாமிரபரணி, பாண்டவர் பூமி போன்ற திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு விஜயஸ்ரீ ஹரி என்ற மகனும், ஜோவிதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இதனைத்தொடர்ந்து நடிகை வனிதா ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த ஜெயராமன் என்பவரை கடந்த 2007ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2009ம் ஆண்டு ஜெய்னிதா என்ற மகள் பிறந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு நீதிமன்றத்தை முறையாக அணுகி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

தந்தை விஜயகுமாருடன் பிரச்சினை ஏற்பட்ட போது தனது கணவரும் அந்த பிரச்சனையில் ஈடுபட்டதாகவும் இதனால் அவருக்கு நிம்மதியும் திரைப் பட வாய்ப்புகளும் பறிபோனதால் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரை விவாகரத்து செய்ததாக வனிதா குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து கடந்த 2013ம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் ராபர்ட் உடன் நடிகை வனிதா டேட்டிங்கில் இருந்து வந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தை தயாரித்தார்கள். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் நடிகை வனிதா தற்போது vfx எடிட்டர் பீட்டர் பாலுடன் காதல் வயப்பட்டு தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் பீட்டர் பால் தன்னை விவாகரத்து செய்து கொள்ளாமல் நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept