நடிகையுடன் சொகுசு வேனில் ஜாலியாக சுற்றும் கொள்ளையன் முருகன் !! அவருக்கு வந்த கொடிய நோய் !! திடுக்கிடும் தகவல் !!

0

தமிழகத்தில் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பத்தில், முக்கிய குற்றவாளியாக தேடப்படும் முருகன், கொள்ளையடித்த பணத்தில் படம் தயாரிப்பது, நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வது என்று இருந்துள்ளான்.திருச்சியில் இருக்கும் லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ஆம் திகதி கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், அங்கு 30 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், அதிரடி சோதனையில் ஈடுபட்ட பொலிசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். கையில் சிக்கிய சுரேஷ் என்பவரை பொலிசார் கோட்டை விட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரையும், முரளி என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிசார் சுரேஷை தீவிரமாக தேடிவந்த நிலையில் அவர் எந்த பதற்றமும் இன்றி ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரின் காரில், தொப்பி மற்றும் ஜீன்ஸ் பேன்ட் சகிதமாக நீதிமன்றத்தில் சரணடைந்தது எப்படி என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் அவரது குடும்பத்தாருடன் சொகுசு வேனில் ஜாலியாக ஊர் சுற்றுகிறாராம்.ஏற்கனவே தன்னிடம் இருக்கும் பணத்தின் மூலம் நடிகைகளை வலையில் வீழ்த்தி அவர்களுடன் சொகுசாக முருகன் இருந்ததாக தெரியவந்தது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள முருகனுடன் ஒரு துணை நடிகையும் தலைமறைவாக இருக்கிறாராம். யார் அந்த துணை நடிகை என்று தெரியவில்லை.கொள்ளை சம்பவத்துக்கு பின்னர் முருகன் எந்த பயமும் இல்லாமல் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தங்கியிருந்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும், பொலிசார் கையில் வைத்திருந்த புகைப்படங்களைக் காட்டி, இவர் தானே முருகன் என விசாரித்தனர். ஆனால் அவர்களோ, இவர் முருகன் இல்லை, அவர் நல்ல ஆரோக்கியமாக பார்ப்பதற்கே வேறு மாதிரி இருந்தார் என கூறியதாக தெரிகிறது.

அதாவது தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள முருகன், மருத்துவ சிகிச்சை மூலமும் பல் மற்றும் முகம் உள்ளிட்டவற்றைச் சரி செய்தும் புதிய தோற்றத்தில் உற்சாகமாக வலம் வருவது தெரியவந்துள்ளது.இதனிடையில் முருகன் தங்கியிருந்த வீட்டுக்கு பொலிசார் சீல் வைத்துள்ளதோடு அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Share.

About Author

Leave A Reply