நடிகை மாளவிகா எப்படி இருக்காங்கனு தெரியுமா..???வைரலாகும் புகைப்படம் உள்ளெ..!!

0

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை மாளவிகா. மாடலாக தன்னுடைய வாழ்க்கையை பயணத்தை தொடங்கியவர் அதன் பின்பு சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள அவர் பிரபல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

கார்த்திக், அஜித், முரளி போன்ற நடிகர்களுடன் நடித்திருந்தாலும், “வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். அதன்பின் பட வாய்ப்புகள் அதிகரித்தது.  ‘திருட்டுப் பயலே’ படத்தில் அவரது நெகட்டிவ் ரோல் மிகப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.

அதன்பின் பல திரைப்படங்களில் முன்னணி வேடங்களில் நடித்து வந்த இவர் படவாய்ப்புகள் குறைந்த பிறகு, திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆனார். அதன் பிறகு ஒரு சில படங்களில் தலையை காட்டினார். அதன் பிறகு சினிமா உலகம் அவரை மறந்தே போய்விட்டது.

பிறகு குழந்தை குட்டி என குடும்ப வாழ்வில் தன்னை அர்பணித்துக்கொண்ட மாளவிகா தற்பொழுது இணையதளங்களில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். 38 வயதை கடந்துவிட்ட இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இரு குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றன.

Share.

About Author

Leave A Reply