நடிகை மீனாவின் தாயிடம் ரஜினிகாந்த் கேட்ட கேள்வி !! 36 வருடங்களுக்குப் பின்பு வெளியான ரகசியம் !!

நடிகர் ரஜினிகாந்த் தனது அம்மாவிடம் கேட்டதாக ஒரு ரகசியத்தை நடிகை மீனா 36 வருடங்களுக்குப் பிறகு பகிர்ந்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் நடிகை அம்பிகா லீடிங் ரோலில் நடித்தப் படம் அன்புள்ள ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நடிகை மீனா ரோஸி என்ற கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

1984 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் கே.நட்ராஜ் இயக்கியிருந்தார். இது அவருக்கு முதல் படமாகும்.இந்தப் படத்தில் நடிகை மீனாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை பார்த்த நடிகை மீனா, இந்த படத்தின் போது தனக்கு கிடைத்த அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

படத்தில் தனது அறிமுக காட்சியையும் ஷேர் செய்திருந்தார் மீனா. உணவில் தண்ணீர் ஊற்றுவது, பாலை நடிகை அம்பிகாவின் முகத்தில் ஊற்றுவது போன்ற காட்சிகளை ஷேர் செய்து கொடுமையான சிறுமி என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ரஜினிகாந்த் தனக்கு சாக்லேட் வழங்கும் காட்சியையும் அதனை அவர் துப்புவதையும் ஷேர் செய்தார் மீனா. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மீனா, தான் நடித்ததிலேயே இதுதான் மிகவும் கடினமான ஷாட், ஏனெனில் எனக்கு சாக்லேட்ஸுட் ஸ்வீட்ஸும் ரொம்ப பிடிக்கும் என கூறியிருக்கிறார்.

தொடர்ந்து முத்துமணி சுடரே வா.. என்ற பாடலையும் ஷேர் செய்துள்ள மீனா.. ரஜினி அங்கிள் என்று கூறும் குரல் தன்னுடையது என்றும் கூறியிருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய தாயாரிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குறீங்க என்று தன்னை கிண்டலடிக்கும் வகையில் கேட்டார் என்றும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Rosy…. 🥀 Meena as Rosy from movie Anbulla Rajinikanth. She acted as an orphanage child in a home, Meena did a wonderful job. She performed so well especially the climax was excellently potrayed, Meena’s acting was on point. She was just 8 years old to emote in such a way, and she made everyone to shed tears with her wonderful performance. She proved herself as an able actress right from her childhood, Meena is Born star!….. 🌟 Credits : Rajinifans.com . . #meena#actress#rajinikanth#kollywood#anbullarajinikanth#rajinikanth#rajinifans#rajinified#tamilactor#tamilcinema#Annaatthe#muthu#Thalaivar168#kamalhassan#Vijay#Thalapathy#ajith#thala#sivakarthikeyan#vijaysethupathy#dhanush#simran#ramyakrishnan#soundarya#nayanthara#jyothika#sneha#keerthysuresh#khushbu#chennai#manjuwarrier

A post shared by MEENA SAGAR™ 🦋 (@meena.classic) on

தன்னை பற்றி தனது அம்மாவிடம் ரஜினிகாந்த் இப்படி கூறியதை பற்றி 36 ஆண்டுகளுக்குப் பிறகு மகிழ்ச்சியாக பகிர்ந்திருக்கிறார் நடிகை மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படம் முடிந்தவுடனேயே மற்றொரு சேனலில் மீனா நடித்த வெற்றிக்கொடிக்கட்டு படம் ஒளிபரப்பானது. இதனையும் பார்த்து சிலிர்த்திருக்கிறார் மீனா.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept