நந்தினி சீரியல் ஹீரோயினுக்கு இரண்டாம் திருமணம் !! நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ !!

Google+ Pinterest LinkedIn Tumblr +

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி கதையில் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் நந்தினி. குஷ்புவின் தயாரிப்பில் உருவான இந்தத் தொடர் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் தொடரில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் நித்யா ராம். பெரியவர்கள் மட்டும் பார்த்த இந்த சீரியலை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததற்கு மிக முக்கிய காரணம் கங்கா கதாபாத்திரமாக இருந்தது.

கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நித்யா ராம், ஆரம்பத்தில் கன்னடத்தில் ஒரு தொடரில் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் `மொட்டு மனசே’ என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் நிலையான இடத்தை பிடித்தார்.

இவர் வினோத் கௌடா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார் பின்னர் அவர்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால், கருத்து வேறுபடுகாரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

தற்போது லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் அவருக்கு பெற்றோர்கள் இரண்டாம் திருமணம் செய்துவைக்கின்றனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவரை அவர் திருமணம் செய்கிறார்.இன்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் இதோ.

Share.

About Author

Leave A Reply