பட வாய்ப்பு அனைத்தையும் ஓரங்கட்டி பிக்பாஸ் வீட்டுக்கு வரும் நடிகை வெளிவரும் உண்மை இதோ!

0

கொட்டி கடக்கும் பட வாய்ப்பு அனைத்தையும் ஓரங்கட்டி பிக்பாஸ் வீட்டுக்கு வரும் நடிகை வெளிவரும் உண்மை இதோ நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று சினிமாவில் பன்முகம் கொண்டவராக திகழும் கமல்ஹாசன், தற்போது அரசியல் கட்சி தலைவராகவும் வலம் வருகிறார். அவரைப் பற்றி அவ்வபோது பல சர்ச்சைகள் எழுந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது திரைப்பயணத்தில் கவனம் செலுத்துபவர், சினிமாவைப் போல டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வருகிறார்.அந்த வகையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சிக்குள் நுழைந்த கமல்ஹாசன், அதிலும் தனது தனி முத்திரையை பதித்தார். வெற்றிகரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு கட்டங்களை நிகழ்த்தியவர், தற்போது மூன்றாவது சீசனில் களம் இறங்க இருக்கிறார்.

இம்மாதம் 23 ஆம் தேதி தொடங்க இருக்கும் ‘பிக் பாஸ் சீசன் 3’ யில் பங்குபெறும் போட்டியாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சில போட்டியாளர்கள் பெயர் கசிந்துள்ளது.காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா போட்டியாளராக பங்கேற்பது உறுதியான நிலையில், தற்போது மற்றொரு போட்டியாளராக பிரபல நடிகை சாந்தினி பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் சாந்தினி கையில், தற்போது அரை டஜன் படங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறாராம்.

சமீபத்தில் நடன இயக்குநர் நந்தாவை திருமணம் செய்துக் கொண்ட சாந்தினி, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

About Author

Leave A Reply