பிக்பாஸ் புகழ் காமெடி நடிகருக்கு குழந்தை பிறந்தது !! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நாயகனாக அறிமுகமானவர் டேனியல். இந்தப் படத்திற்கு பிறகு இவர் விஜய் சேதுபதி யோடு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் அவருக்கு நண்பராக நடித்து மிகவும் பிரபலம் ஆனார்.

அதன்பின் தமிழில் கவலை வேண்டாம், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், 3 உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 2 கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் இவர் பிரபலம் அடைந்தார்.

இந்த சீசன் முடிந்த பிறகு இவர் தன் காதலியான தெனிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு சினிமா துறையை சார்ந்தவர்களும், இவரது நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept