பிக் பாஸ் முடிந்ததும் குருநாதரை நேரில் சந்தித்த சாண்டி !! வியக்கும் பார்வையாளர்கள் !! தீயாய் பரவும் புகைப்படம்

0

பிக்பாஸ் போட்டி நிறைவு பெற்று மூன்று நாட்களாகிறது. இன்னும் பிக்பாஸ் ஷோவை பற்றியே சிலர் பேசிகொண்டுள்ளனர். முக்கியமாக இரவு 9 மணிக்கு மேலானால் சிலர் பிக்பாஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது பிக்பாஸ் முடிந்ததால் டிவி பார்ப்பதையே நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பிக்பாஸ் ஷோ ரசிகர்களின் மனதில் நிலைத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வெற்றியாளரான டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது நடன குருவான கலா மாஸ்டரை நேரில் சந்தித்துள்ளார்.பிக் பாஸ் வீட்டையே கலகலப்பாக வைத்திருந்தவர் சாண்டி. இடையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும், அவர் நடந்துக் கொண்ட விதம் மக்கள் மனதில் சாண்டிக்கான இடத்தை உறுதி செய்தது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது டாஸ்க் ஒன்றில் அவரின் நடன குருவான கலா மாஸ்டர் பற்றி கூறியிருப்பார்.இந்நிலையில் சாண்டி தனது நடன குருவான கலா மாஸ்டரை அவரது டான்ஸ் ஸ்டூடியோவில் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக அடுத்தடுத்து முக்கிய பிரபலங்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருக்கும் சாண்டியை பார்த்து ரசிகர்கள் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் உள்ளனர்.

Share.

About Author

Leave A Reply