பெண் காவலரிடம் ஆ பா சமாக பேசிய உதவி ஆய்வாளர் !! சக போலீஸ் வீடியோவை வெளியிட்டதால் ப ர ப ரப்பு !!

கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம் மதுக்கரை காவல் வட்டத்திற்கு உட்பட்ட கந்தே கவுண்டன் சாவடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சரவணன்.

இவர் மேல் அதிகாரிகளின் உதவியுடன் தனக்கு பிடிக்காத உதவி ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து வந்ததாகவும், கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இக் காவல்நிலையத்தில் பணியில் உள்ள காவலர்கள் ஒருவித அச்சத்துடனும் மன உளைச்சலுடனும் பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் முத்துக்குமார் என்பவருக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனுக்கும் சில மாதங்களாக மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் கந்தே கவுண்டன் சாவடி காவல் நிலையத்தில் இருந்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்‌.

இந்நிலையில் (உதவி ஆய்வாளர் முத்துக்குமார் இல்லாதபோது) காவல்நிலைய வளாகத்தில் உதவி ஆய்வாளர் முத்துக்குமாரை பணியிட மாற்றம் செய்தது குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் பெண் காவலர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் அநாகரிகமாக திட்டி பேசியுள்ளார். இதனை காவலர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் பெண் காவலர்கள் முன்பு உதவி ஆய்வாளர் முத்துக்குமாரை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டிய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் மீது துறை ரீதியான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் காவல் நிலையத்தில் மறைமுகமாக முன்விரோதம் காரணமாக வீடியோ எடுத்து வெளியிட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept