பெற்ற தாயை விரட்டி விட்டு, உல்லாச வாழ்க்கை வாழ்ந்த பிரபல சீரியல் நடிகை !

0

வயதானாலே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பாரமாக தான் தெரிகிறார்கள். அது ஷெலிபிரிட்டியாக இருந்தாலும் சரி, சாமான்ய மக்களாக இருந்தாலும் சரி முதுமை பருவத்தில் பெற்றோர்களை பராமரிப்பதில் சுணக்கம் காட்டுகின்றனர். சிலர் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர். சிலர் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனர். அதே சமயத்தில் ஒரு சில பெற்றோர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களும் சொல்லி மாளாது. நினைத்தற்கெல்லாம் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதனால் பிள்ளைகளின் மனம் நொந்து நூலாகி போயிருப்பார்கள்.

அந்த வகையில் நடிகை தேவி கிருபா 65 வயதுடைய தனது அம்மாவை வீட்டைவிட்டுத் துரத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `ஆனந்தம்’, `தென்றல்’ போன்ற தொடர்களின் மூலம் பிரபலமானவர் நடிகையா இருந்தவர் தேவி கிருபா. வருமானம் குறைவானதால் சீரியல்களில் இருந்து விலகி வசந்த் தொலைக்காட்சியில் ஒரு கிச்சன் ஷோவுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவரது தாயார் ஸ்வாதி கிரிஜா, சென்னை மதுரவாயல் போலீசில் திடீரென ஒரு வாக்குமூலத்தை எழுதிக் கொடுத்துள்ளார். அதில் ‘எனக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே உள்ளார். நான் பெற்றெடுத்த மகள் தேவி கிருபா இறந்துவிட்டதாக, நான் நினைத்துக் கொள்கிறேன். இனி அவள் எனக்கு மகள் இல்லை. நான் அவளுக்கு அம்மா இல்லை’ என்று ஸ்வாதி கிரிஜா எழுதியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்த ஸ்வாதி கிரிஜா இரவு, பகல் பாராமல் அவளுக்கு உதவியாக இருந்தேன். அந்த நன்றியை கூற நினைத்துப் பார்க்காமல் திடீரென என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டுட்டாள். எனக்கு மனது சங்கடமாக இருக்கிறது. இப்போது சாலையோர தர்கா, கோயில் போன்றவற்றில் படுத்து உறங்கும் நிலைக்கு என்னை ஆளாக்கிவிட்டாள். கடந்த 8 மாதங்களாக, ஆசிரமம் ஒன்றில் தங்கியுள்ளேன்.

எனது செலவை என் மகன் கோகுல் மட்டும் தான் பார்த்துக்கொள்கிறான். 65 வயதான என்னை வீட்டுக்கு மூத்த மகளான தேவி கிருபா ஏற்றுக்கொள்ளவில்லை.  அவள் என்னை தவிர்த்துவிட்ட தனியாக வாழ விரும்புகிறாள்’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை தேவி கிருபா கூறுகையில், ‘ நான் 14வயதிலிருந்தே நடிக்க ஆரம்பித்துவிட்டேன். குடும்ப கஷ்டத்திற்காகப் பணத்தை அம்மாவிடம் தான் கொடுப்பேன். ஆனால் நான் ஊடகத்துறையில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை கணக்கு வழக்கின்றி என் அம்மா இஷ்டப்படி செலவு செஞ்சாங்க. பல நாட்களாக பொறுத்துக்கொண்டாலும் , ஒரு கட்டத்தில் என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.  அதனாலதான், நானே வீட்டை விட்டு வெளியே போயிடுங்க’னு சொல்லிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல, தேவி கிருபாவின் தம்பி கோகுல் கூறும்போது, ‘ அம்மா, பணத்தை தாறுமாறாகச் செலவு செய்வது, அக்காவுக்கு பிடிக்கல. இதற்கான கணக்கு வழக்கை கேட்டதற்கு, அம்மா தர மறுத்துட்டாங்க. இதனால், 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றி இந்த நிலை வந்துவிட்டது. நான் மட்டும் என்ன செய்ய முடியும், அவங்க 2 பேரும் சமாதானமா போகாம எதுவும் நடக்காது.

இந்த வீடு எல்லாமே அக்கா சம்பாதிச்சி வாங்கினது. அக்கா சொல்றபடி தான் நடந்துக்க முடியும். அது அம்மாவுக்கு புரியல. எங்களை பற்றி வெளியே பலவிதமாக வதந்திகளைப் பரப்பி விடறாங்க. நான் வேறு வழியின்றி, 2 பேருக்கும் சமாதானமாக நடந்துகொள்ள வேண்டியதாக உள்ளது. அக்கா சம்பாதிச்ச பணத்தை கணக்கு வழக்கின்றி அம்மா செலவு செய்தது மன்னிக்க முடியாத துரோகம்.

செஞ்ச தப்பை ஒப்புக்கிட்டா, சேர்ந்தாவது இருக்கலாம். இப்போ நானும், அக்காவும் தான் இருக்கிறோம். கிட்டத்தட்ட பத்து வருடமா இந்த வீட்டுலதான் இருக்கிறோம். இப்போ என்னையும் அக்கா, வீட்டை விட்டுத் துரத்திட்டதா அம்மா மத்தவங்ககிட்ட சொல்லிக்கிட்டிருக்காங்க. சீக்கிரம் இந்தப் பிரச்னை தீரும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

Share.

About Author

Leave A Reply