முகேனிற்கு என்னாச்சு..? மோதிக்கொண்ட போட்டியாளர்கள்.! கமலின் காரசாரமான பேச்சு ப்ரோமோ வீடியோ.!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 10 நாட்களில் வெற்றி என்ற எண்ணிக்கையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதனால் போட்டியாளர்கள் கடுமையாக மோதிக்கொள்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் உடலால் மோதிக்கொண்ட போட்டியாளர்கள், மனதால் மோதிக்கொண்ட போட்டியாளர்களைக் குறித்து கமல் பேசியுள்ளார்.

ஆனால் போட்டியாளர்களில் முகேன் மட்டும் காணவில்லை. இதனால் கடுமையாக விளையாடியதால் முகேனிற்கு அடிப்பட்டிருக்குமோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 10 நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகளவில் இருக்கிறது.

இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடத்தப்பட்டு வந்தது. அதில் அதிக மதிப்பெண் பெற்றால் நேரடியாக இறுதி வாரம் சென்று விடலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், போட்டியாளர்கள் மிகவும் கடுமையாக, அடித்துக்கொண்டு டாஸ்க் செய்து வந்தனர்.

இந்நிலையில், இந்த டாஸ்கில் சாண்டி லொஸ்லியாவை ஒருமுறை தெரியாமல் இடித்து தள்ளிவிட்டார். இதனால் கவின் சாண்டியை திட்டினார்.

இந்நிலையில், இன்று கமல்ஹாசன் இந்த சம்பவம் குறித்து கவினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share.

About Author

Leave A Reply