முழுவதும் சிதைந்த நிலையில் இளம்ஜோடிகளின் உடல் கண்டெடுப்பு !! அதிரவைக்கும் பின்னணி !!

Google+ Pinterest LinkedIn Tumblr +

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அபிஜித் மோகன்(25), ஸ்ரீலட்சுமி(21). இவர்கள் இருவரும் பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினர். இவர்கள் இருவரும் வெகுநாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் சாதியை காரணம் சொல்லி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் முதல் தங்களது குடும்பத்தாரொடு பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வெகு நாட்கள் ஆகியும் இருவரும் தங்களது பெற்றோரை தொடர்பு கொள்ளாததால், பெங்களூரு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிரமாக இருவரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி மடிவாலா பகுதியில் இரண்டு சட லங்கள் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் அது மோகன் மற்றும் லட்சுமி என்பது தெரியவந்தது.

இவர்களின் இருவரின் சட லத்தை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோகன் மற்றும் ஸ்ரீலட்சுமியின் காதலுக்கு சாதியைக் ஒரு காரணமாக வைத்து அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் த ற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.

About Author

Leave A Reply