லாக்டவுனால் மன அழு த்தம் !! “வசந்த மாளிகை” பட நடிகை வாணிஸ்ரீ மகன் த ற்கொ லை ?? அ தி ர் ச்சியில் திரையுலகம் !!

தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் 1960 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வாணிஸ்ரீ. சில கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ஊருக்கு உழைப்பவன், சிவகாமியின் செல்வன், வாணி ராணி, வெள்ளி விழா, புண்ணிய பூமி, நிறை குடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் வாணிஸ்ரீ நடித்த வசந்த மாளிகை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே எடுத்துச் சென்றது. பாலாஜி, சி.ஐ.டி. சகுந்தலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் அப்போது வெள்ளிவிழா கொண்டாடியது.

1972ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 200 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூலில் சாதனை படைத்தது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிஜிட்டலில் ரிலீஸ் செய்யப்பட்ட வசந்த மாளிகை படத்திற்கு சிவாஜி ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை யாரும் மறக்க முடியாது.இந்த சினிமா மூலமாக மிகப்பெரிய புகழ் பெற்ற வாணிஸ்ரீ, கருணாகரன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையை விட்டு சிறிது காலம்  ஒதுங்கியிருந்தார்.

வாணிஸ்ரீ – கருணாகரன் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் அபிநய வெங்கடேஷ் கார்த்திக் பெங்களூரு அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்ததாக தெரிகிறது.

கொரோ னா பிரச் சனை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது குடும்பத்தை காண முடியாமல் தவித்த கார்த்திக், தந்தை கருணாகரனுடன் திருக்கழுகுன்றத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை காண முடியாததால் மருத்துவர் அபிநய வெங்கடேஷ் கார்த்திக் மன அழு த்தத்தில் இருந்த தாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூ க் கிட்டு த ற் கொ லை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொருபுறம் தூக்கத்தில் இருந்த அபிநய வெங்கடேஷ் கார்த்திக் திடீர் மா ர டைப்பு காரணமாக உ யி ரி ழ ந்ததாகவும் கூறப்படுகிறது.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept