விஜய்க்கு ஜோடியாக மின்சார கண்ணா படத்தில் நடித்த நாயகி இது தற்போது அவருடைய நிலைமை என்ன தெரியுமா!

இளையதளபதி விஜய் நடிப்பில் காமெடி, காதல், செண்டிமெண்ட் என கலவையாக வெளிவந்தத் திரைப்படம்தான் மின்சார கண்ணா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்தத் திரைப்படத்தில் விஜய், ரம்பா, குஷ்பு, மாஸ்டர் மகேந்திரன், மணிவண்ணன் என பலர் நடித்திருந்தனர்.

மின்சாரக்கண்ணா திரைப்படத்தில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக மோனிகா காஸ்ட்லினோ நடித்திருந்தார். மும்பையை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஆரம்பத்தில் இந்திப்படங்களில் தான் நடித்துவந்தார். 1999ல் காலியா என்ற இந்திப்படத்தில் சின்ன ரோலிலும், மின்சாரகண்ணா படத்தில் நாயகியாகவும் நடித்தார்.

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லை. இதனால் கடந்த 2001ல் காமசுந்தரி என்ற கவர்ச்சிப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாத நிலையில் கடந்த 2010ல் சத்யபிரகாஷ்சிங் என்ற துணை இயக்குனரை திருமஃணம் செய்துகொண்டார். ஒரே ஆண்டில் விவாகரத்து ஆன நிலையில் மோனிகா தனித்தே வாழ்ந்துவருகிறார். ஸ்டார் பிளஸ், சோனி கலர்ஸ் உள்பட பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கும் மோனிகா இப்போதும் இந்தி சீரியல்களில் நடித்துவருகிறார்.

அவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த தமிழ் ரசிகர் மின்சாரகண்ணா திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகியும் மோனிகா இன்னும் அப்படியே இருக்கிறாரே? என ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

புகைப்படம் 1:

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept