வெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள் !! தந்தையின் இ றுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத இக்கட்டான நிலை !!

15,181

நடிகர் மற்றும் இயக்குனர் விசு உ யிரிழந்த நிலையில் அவரின் மகள்கள் வெளிநாட்டில் உள்ளதால் இ றுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனரும், நடிகருமாக இருந்தவர் விசு. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசமடைந்ததால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று மாலை விசு ம ரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

விசு உடல் துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

மறைந்த விசுவுக்கு உமா என்ற மனைவியும் லாவண்யா, சங்கீதா, கல்பனா என்ற 3 மகள்களும் உள்ளனர். 2 மகள்கள் அமெரிக்காவில் உள்ளனர். இன்று மாலை (திங்கட்கிழமை) இறுதி சடங்கு நடக்கிறது.

இந்த சூழலில் கொ ரோனா ப ரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் சேவை 31ஆம் திகதி வரை இந்தியா முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் விமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

இதனால் அமெரிக்காவில் இருக்கும் விசுவின் மகள்கள் இ றுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept