வெளிநாட்டு பார்ட்டியில் வேற லெவல் பண்ணிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் !! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ !!

Google+ Pinterest LinkedIn Tumblr +

நடிகை நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து வரும் நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர்.நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம் தான். அவர்கள் இருவரும் ஜோடியாக வெளிநாடுகளுக்கு செல்லும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா தற்போது நடித்து வரும் தளபதி63 படத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதனை அவள் பட புகழ் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கவுள்ளார்.

இந்த படத்தினை விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளார் என்று தற்போது தகவல் கசிந்துள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், சினிமா பணிகள் தவிர்த்து மற்ற சமயங்களில் ஒன்றாகவே இருக்கின்றனர்.

சமீபத்தில் தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாட நயன்தாரா – விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றிருந்தார். இதையடுத்துஅங்கு அவர்களுக்கு நண்பர்கள் விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த பார்ட்டியில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.

Share.

About Author

Leave A Reply