இரண்டே இரண்டு பூண்டு இருந்தால் போதும். உங்க இல்லற வாழ்க்கை செம ஜாலிதான் !

0

இரண்டே இரண்டு பூண்டு இருந்தா போதும். உங்க இல்லற வாழ்க்கை செம ஜாலிதான்…! எப்படின்னு கேட்கறீங்களா? கீழே இருக்கிற வீடியோவை மிஸ் பண்ணாம கடைசி வரைக்கும் பாருங்க. அதுக்கான சொல்யூசன் கொடுத்திருக்கிறோம்.  நீடித்த இல்லறம் அமைய பக்க விளைவு இல்லாத மருந்து இது.
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.  இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

சிறுநீர் சொட்டு சொட்டா நின்னு நின்னுவருதா? காரணம் என்ன? அது எதோட அறிகுறி?

அப்படி வந்தால் அது சிறுநீர்க் குறைபாடாக கூட இருக்கலாம். சிறுநீர்க் குறைபாடு நோய் என்பது மருத்துவ ரீதியாக ஆலிக்யூரியா என்று அழைக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு தினமும் சிறுநீரக வெளிப்பாடு 400 மில்லி லிட்டருக்கு குறைவாக இருக்கும் போதும், குழந்தைகளுக்கு 0.5 மில்லி லிட்டர் /கிலோ கிராம் /1 மணி நேரம் குறைவாகவும், பிறந்த குழந்தைக்கும் 1 மில்லி லிட்டர் /கிலோ கிராம் /1 மணி நேரம்க்கு குறைவாக சிறுநீரக குறைவு இருப்பது இந்த நோயின் அறிகுறியாகும்.

இது ஹைப்போயூரஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. அதாவது தமிழில் சொல்வதானால் போதுமான சிறுநீர் வெளிப்பாடு இல்லை என்று அர்த்தமாகும்.

சிறுநீரக காயம்
இந்த ஆலிக்யூரியா மருத்துவ வார்த்தைகளின் படி கடுமையான சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரகக் காயம் என்பது போன்று அழைக்கப்படுகிறது. ஆலிக்யூரியா சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப கால அறிகுறியாகும்.

விளைவுகள்
இந்த ஆலிக்யூரியா விளைவுகள் சிறுநீரக முன்கணிப்பு, பிந்தைய சிறுநீரக பாதிப்பு இவற்றை விவரிக்கிறது.

இது சிறுநீரகங்களுக்குள் ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்குகிறது.. சிறுநீரகங்களில் இரத்த ஓட்டம் சரியில்லை என்றால், கட்டாயம் அதில் செயலிழப்பு ஏற்படுகிறது. இந்த இரத்த ஓட்ட இழப்பு சிறுநீர் வெளிப்பாட்டை குறைக்க ஆரம்பித்து விடும்.

ஆலிக்யூரியா வகைகள்

உள்ளார்ந்த சிறுநீரக கோளாறுகள்

வெளிப்புற சிறுநீரக கோளாறுகள்

முன்கணிப்பு சிறுநீரக பாதிப்பின் விளைவுகள்

சுவாசகுழாய் நோய்

இரத்த சர்க்கரை நோய்

பெனிடாலியல் அஸ்பிசியா

இரத்தக் கசிவு

பிறப்பு இதயக் கோளாறு

ஆலிக்யூரியா அறிகுறிகள்
நீர்ச்சத்து பற்றாக்குறை

நீர்ச்சத்து பற்றாக்குறையால்தான் சிறுநீர்க் குறைபாடு ஏற்படுகிறது. அதுதான் அதற்கு முக்கிய காரணம் . போதுமான நீர் உங்கள் உடலில் இல்லாத போது வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைய ஆரம்பித்து விடும். இந்த நீர்ச்சத்து பற்றாக்குறையால் வயிற்று போக்கு, காய்ச்சல், வாந்தி போன்றவைகளும் ஏற்பட ஆரம்பித்து விடும். உங்களுடைய சிறுநீரகம் தேவைப்படும் நீரை உங்கள் உடலிருந்து எடுக்க ஆரம்பித்து விடும்.

சிறுநீர்ப் பாதை அடைப்பு

சிறுநீர்ப் பாதை அடைப்பு என்பது சிறுநீரை வெளியேற்ற முடியாத நிலையாகும். இந்த அடைப்பு  ஏற்பட்டால் இரு  சிறுநீரகங்களையும் பாதிப்படைய செய்து விடும். இந்த பாதிப்பால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவது உறுதி. இந்த சிறுநீரக அடைப்பு வாந்தி, உடல் வலி, குமட்டல், காய்ச்சல் மற்றும் சிறுநீரக உறுப்பு வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

மருந்துகள்

சில மருந்துகள் நமது நோயை குணப்படுத்தி சென்றாலும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி செல்கிறது. உதாரணமாக டையூரிடிக்ஸ், அண்டிகோலினிஜெர்கெக்ஸ், கீமோதெரபி, தடுப்பாற்றல் மருந்துகள் போன்றவை குறைந்த சிறுநீர் வெளிப்பாட்டை ஏற்படுத்தும்.

ஆன்டி பயாடிக் மருந்துகளான ஆஞ்சியோடென்சின் என்னைசம் இன்கிபிட்டர் மற்றும் ஜெண்டமைசின் போன்றவை உங்கள் உடலில் சிறுநீர் வெளிப்பாட்டை குறைக்கிறது.

இரத்த இழப்பு
இந்த ஆலிக்யூரியாவால் உடலில் உள்ள ஏதாவது காயங்கள், வெட்டுகள் வழியாக இரத்த இழப்பு ஏற்பட ஆரம்பித்து விடும்.

இது ஏற்படக் காரணம் அடைபட்ட சிறுநீரகம் செயல்பட போதுமான இரத்தம் தேவைப்படுகிறது. இதனால் இந்த இரத்த இழப்பு ஏற்படுகிறது.

கடுமையான தொற்று
ஆலிக்யூரியாவால் போதுமான சிறுநீர் வெளியேறாமல் போவதால் உடலில் நச்சுகள் தேங்க ஆரம்பித்து விடும். இதனால் இரத்த ஓட்டம் பாதை சீராக இல்லாமல் குறைந்து சிறுநீரக பாதை செயல்பாட்டை கவனிக்க வேண்டியிருக்கும்.

அறிகுறிகள்
உடம்பில் நீர்த்தேக்கம்

கருப்பு கலரில் சிறுநீர் வெளியேறுதல்

சோர்வு

உடம்பு வலி

குமட்டல்

வீக்கம்

காய்ச்சல்

வாந்தி

கண்டறிதல்

ஆலிக்யூரியாவை சில மருத்துவ சிகச்சைகள் மூலம் கண்டறியலாம். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்படும் போது உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களுடைய சிறுநீர் வெளிப்பாட்டை பொருத்து மருத்துவர் உங்களை பரிசோதித்து ஆலோசனை கூறுவார். அவர் கூறுவதை பொருத்து நீங்கள் சில பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

இரத்த பரிசோதனை
இரத்த பரிசோதனை மூலம் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீர்ப் பாதை தொற்று, இரத்த கசிவு, இரத்தத்தில் அதிகளவில் கெமிக்கல் கலந்திருப்பது, சிறுநீரக கற்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

சிடி ஸ்கேன்
சிடி ஸ்கேன் உங்களுடைய பெல்விஸ் மற்றும் அடிவயிற்று பகுதியை படம் பிடித்து காட்ட உதவுகிறது. இது அதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எளிதாக அறிய உதவுகிறது.

சிறுநீரக பரிசோதனை
சிறுநீரக பரிசோதனை மூலம் இரத்தத்தில் உள்ள புரோட்டீன், வெள்ளை அணுக்கள், இரத்த சிவப்பணுக்கள், சிறுநீர்ப் பாதை தொற்று, சிறுநீர்ப் பை தொற்று போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

இன்ட்ராவீனஸ் பைலோகிராம்
இன்ட்ராவீனஸ் பைலோகிராம் மூலம் டை (சாயம்) போன்றதை கைகளில் உள்ள இரத்த நரம்புகள் வழியாக சிறுநீரகத்திற்கு செலுத்தி அதன் அமைப்பை பாதிப்பை கண்டறியலாம்.

அடிவயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் அடிவயிற்று பகுதியை ஸ்கேன் செய்து சிறுநீரக பாதையில் எதாவது அழற்சி மற்றும் தொற்று உள்ளதா என்பதை கண்டறியலாம்.

யூரின் கல்ட்சர்

சிறுநீர் மாதிரியை எடுத்து கல்ட்ச்சர் பரிசோதனை செய்து அதில் உள்ள பாக்டீரியா வளர்ச்சியை கண்டறியலாம். இது சிறுநீரக பாதை தொற்றை அறிய உதவுகிறது.

ஆலிக்யூரியாவை சரி செய்வது எப்படி

ஆலிக்யூரியா வருவதை தடுக்க எந்த இயற்கை முறைகளும் இல்லை. ஆனால் உடலை சரியாக கவனிப்பது நல்லது. உங்களுக்கு சிறுநீர் குறைபாடு இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது தான் நல்லது.

போதுமான அளவு நீர் அருந்துங்கள், உங்களை நீர்ச்சத்து டன் வைத்துக் கொள்ளுங்கள்

வயிற்று போக்கு, வாந்தி மற்றும் உடல் நலக் குறைபாடு சமயங்களில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

நிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் எலக்ட்ரோலைட்ஸ்யை உற்பத்தி செய்ய உதவும்.

கவனத்தில் வைக்க வேண்டியவை

ஆலிக்யூரியா பற்றி நிறைய பேர்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை. இதன் அறிகுறிகளை சாதாரணமாக விட்டு விடாதீர்கள். உடனே மருத்துவரை அணுகி சீக்கிரம் சிகச்சை பெற்று கொள்ளுங்கள். இல்லையென்றால் குறைந்த சிறுநீர் வெளிப்பாடு கீழ்க்கண்ட தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

இதயம் செயலிழப்பு

அனிமியா

இரத்த தட்டுகள் குறைவு

ஹைபர் டென்ஷன்

சீரண மண்டல பிரச்சினைகள்.

Share.

About Author

Leave A Reply