4 மனைவிகள், 30 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் : ஒரே இரவில் அடித்த அதிர்ஷ்டம்!!

தான்சானியாவை சேர்ந்த Saniniu Laizer என்பவர் ஒரே இரவில் மில்லியனராகியுள்ள அற்புத சம்பவம் நடந்துள்ளது. தான்சானியாவை சேர்ந்தவர் Saniniu Laizer, இவருக்கு நான்கு மனைவிகள், 30 குழந்தைகள் இருக்கின்றனர்.

சிறிய அளவிலான சுரங்கம் தோண்டும் பணியை செய்து வருகிறார். இவருடைய சுரங்கத்திலிருந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு கற்கள் இவரை மில்லியனராக்கியுள்ளது.

இதன் எடை 30 கிலோ இருக்கலாம் என நம்பப்படுகிறது, பூமியிலேயே அதிகவிலைமிக்க ரத்தின கற்கள் இவை என கூறியுள்ள அமைச்சகம், பச்சை, சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இக்கற்களை Manyaraவில் நடந்த சந்தையில் விற்ற போது 3.4 மில்லியன் டொலருக்கு விலை போனது. இதனால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் Saniniu Laizer, தன்னுடைய சமூகத்தினரை மேம்படுத்த இப்பணத்தை பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய வீட்டுக்கு அருகிலேயே பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி ஏழை மாணவர்களுக்கு கல்வியை புகட்டவும் முடிவு செய்துள்ளாராம். தான் படிக்கவில்லை என்றாலும், பள்ளியில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதே தன்னுடைய நோக்கம் என்கிறார்.

இதனால் தன்னுடைய வாழ்க்கைமுறையில் எதுவும் மாறப்போவதில்லை என கூறும் Saniniu Laizer, 2000 பசுக்களை வாங்கி வளர்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept