9 ஆண்டுகளுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் “தல” அஜித் ?? அப்படி என்ன நிகழ்ச்சி தெரியுமா..?

Google+ Pinterest LinkedIn Tumblr +

நடிகர் அஜித் இறுதியாக கலந்துகொண்ட பொதுநிகழ்ச்சி என்றால் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  நடைபெற்ற “பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா” என்ற நிகழ்ச்சி தான்.

அந்த நிகழ்ச்சியில் அஜித் என்ன பேசினார். அதனால், எழுந்த சர்ச்சைகள் என்ன.? அஜித்திற்கு குவிந்த பாராட்டுகள் என்ன.? என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஜித் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை.
இந்நிலையில், 9 ஆண்டுகள் கழித்து இப்போது கலந்து கொள்கிறார்.

திரையுலகில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகளாகியிருக்கும் நிலையில் அந்தத் துறையில் பன்முகத் திறமை கொண்ட ஆளுமையாகவும் இந்திய சினிமா வரலாற்றில் தனித்துவம் மிக்க கலைஞனாகவும் விளங்கி வருகிறார்.

கமல்ஹாசனின் 60-வது ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி வரும் 17-ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் கமல்ஹாசனை வாழ்த்த ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத நடிகர் அஜித்துக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் கலந்துகொள்வார் என்று அவர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் மூத்த நடிகரான கமல்ஹாசனைப் பாராட்டுவதற்காக அஜித் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றே கூறுகிறது கோலிவுட் வட்டாரம். அஜித் நேரில் கலந்து கொள்வாரா என்பது நாளை தெரிந்துவிடும்.

Share.

About Author

Leave A Reply