Connect with us

Tamil Cinema News | Daily updates

நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் நடித்த பிக்பாஸ் பூர்ணிமா..! இதுக்காகவே டிரெய்லரை பார்த்தவர்கள் ஏராளம்.. என்ன கதாபாத்திரம் தெரியுமா.?

poornima nayan 1

Cinema

நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் நடித்த பிக்பாஸ் பூர்ணிமா..! இதுக்காகவே டிரெய்லரை பார்த்தவர்கள் ஏராளம்.. என்ன கதாபாத்திரம் தெரியுமா.?

பிக்பாஸ் பூர்ணிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கி முதல் வார இறுதியில் அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் வெளியேறிய மறுதினமே உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக பவா செல்லதுரையும் வெளியேறினார்.

poornima nayan

இதனால் தற்போது 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. இந்த சீசனில் அதிக ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராக பூர்ணிமா ரவி இருந்து வருகிறார்.

poornima ravi

கடலூரை சேர்ந்த இவர் ஒரு ஐடி நிறுவனத்தில்தான் வேலையில் இருந்தார். அங்கு நடந்த சில பிரச்சினைகள் காரணமாக வேலையில் இருந்து நின்றார். அதன் பிறகு தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல மில்லியன் ரசிகர்களை கொண்ட ஒரு செலிபிரிட்டியாக மாறினார் பூர்ணிமா.

poornima ravi 1

அவர் போடும் அத்தனை வீடியோக்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து சில குறும்படங்கள் மற்றும் ஆல்பம் என தன் முகத்தை காட்டி வந்த பூர்ணிமாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

poornima

நயன்தாரா

தமிழ் சினிமாவில் “லேடி சூப்பர் ஸ்டார்” ஆக இருப்பவர் நயன்தாரா. தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை பெற்றுள்ளார். 

nayanthara 1

90களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.

nayanthara 2 1

தற்போது இவர் நடிப்பில் ‘அன்னபூரணி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

3329 Nayanthara

என்ன படம் தெரியுமா?

இந்த நிலையில் பூர்ணிமா நடித்த ஒரு திரைப்படம் இன்னும் ஒரு சில நாள்களில் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கிறது. ஜெய் மற்றும் நயன்  நடிப்பில் தயாராகியிருக்கும் படமான அன்னபூரணி திரைப்படத்தில்தான் பூர்ணிமா ரவி நடித்திருக்கிறார்.

poorani

நயன்தாராவின் தோழியாக நடித்துள்ளார். பூர்ணிமா மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top