போனில் பேச பேச  விஷம் குடித்த புதுமாப்பிள்ளை : மறுமுனையில் தூக்கில் தொங்கிய புதுப்பெண் – அதிர்ச்சி காரணம் என்ன தெரியுமா..?

போனில் பேச பேச விஷம் குடித்த புதுமாப்பிள்ளை : மறுமுனையில் தூக்கில் தொங்கிய புதுப்பெண் – அதிர்ச்சி காரணம் என்ன தெரியுமா..?

இந்தியாவில் போனில் பேசி கொண்டிருக்கும் போதே ஒரு முனையில் கணவர் விஷம் குடித்த நிலையில் மறு முனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அஷோக். இவருக்கும் ரஞ்சிதா என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

Dramatic bleached vintage portrait of a sad and lonely teenager with space for text

இந்நிலையில் நேற்று முன் தினம் திருமண நிகழ்ச்சிக்கு போவதாக கூறிவிட்டு அஷோக் வெளியில் சென்றார். ஆனால் வெளியில் கணவர் செல்வதை ரஞ்சிதா விரும்பவில்லை. இந்நிலையில் போன இடத்திலிருந்து அஷோக், ரஞ்சிதாவுக்கு போன் செய்தார். அப்போது இருவரும் போனிலேயே வாக்குவாதம் செய்த போது திடீரென அஷோக் விஷம் குடித்துவிட்டு போனை கட் செய்தார்.

இதையடுத்து மன வருத்தத்தில் இருந்த ரஞ்சிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்த அஷோக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அஷோக் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் தான் ரஞ்சிதா தற்கொலை செய்தார் என அவர் தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் கூறுகையில், தம்பதியின் இந்த செயலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம், சிகிச்சையில் உள்ள அஷோக் கண்விழித்து வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்பதற்காக காத்துள்ளோம் என கூறியுள்ளனர்.

Leave a Comment