கோவை சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூரன் சிக்கியது எப்படி?குலைநடுங்க வைக்கும் பரபரப்பு தகவல் !!

0

கோவை அருகே 6 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் சிறுமியை கொலை செய்தவர்கள் என்று தெரியாமல் குழம்பி தவித்த பொலிசாருக்கு, தீவிர விசாரணையில் கொலைகாரன் சிக்கினான்.

கோவை அருகே 6 வயது சிறுமி கடந்த 25-ந் தேதி மாலை அங்குள்ள கடைக்கு வெற்றிலை வாங்க சென்றாள். பின்னர் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் 25-ந் தேதி அந்த பகுதி முழுவதும் சிறுமியை போலீசாரும், பொதுமக்களும் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் போலீசாரும், பொதுமக்களும் தேடிய அதே இடத்திலேயே மறுநாள் அந்த சிறுமியின் உடல் கிடந்துள்ளது. எனவே சிறுமியை அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் தான் யாரோ கொலை செய்து அங்குள்ள வீட்டில் வைத்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

எனவே சிறுமி காணாமல் போன நேரத்தில் அந்த தெருவில் யார்-யார்? வீட்டில் இருந்தார்கள்? யார்-யார் வெளியே சென்றிருந்தார்கள் என்று போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். இதில் அதே தெருவை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் வீட்டில் இருந்தது தெரியவந்தது.

மேலும் சந்தோஷ்குமார் அந்த சிறுமியிடம் பேசியதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஏற்கனவே பார்த்துள்ளனர். ஆனால் சம்பவத்தன்று அவர் சிறுமியை அழைத்ததையோ, பேசியதையோ யாரும் பார்க்கவில்லை. இதனால் அவர் இதை செய்திருக்க மாட்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் சந்தோஷ்குமார் வீட்டில் நடந்தது.

அதாவது சிறுமி காணாமல் போன 25-ந் தேதியன்று இரவு 9 மணியளவில் சந்தோஷ்குமாரின் பாட்டி இறந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் இறந்து விட்டதால் அந்த வீட்டுக்கு உறவினர்கள் பலர் வந்து சென்றனர். துக்கம் விசாரிக்க வந்தவர்கள் வீட்டின் உள்ளேயும் சென்றுள்ளனர். அப்போது அங்கு சிறுமியின் உடல் இருந்ததாக யாரும் புகார் கூறவில்லை.

பின்னர் அந்த சிறுமி காணாமல் போன நேரத்தில் அந்த தெருவில் வீட்டில் இருந்த சந்தோஷ்குமார் உள்பட சிலரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் சந்தோஷ்குமார் தவிர மற்றவர்கள் குற்றத்தில் ஈடுபடவில்லை என்பது உறுதியானது. எனவே சந்தோஷ்குமாரிடம் போலீசார் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் பாட்டி இறந்த போது வீட்டுக்கு வந்த உறவினர்களுக்கு தெரியாமல் சிறுமியின் உடலை சந்தோஷ்குமார் யார் கண்களிலும் படாமல் வீசியதாலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழவில்லை. ஆனால் சிறுமி காணாமல் போன நேரம், அவர் வீட்டில் இருந்த நேரம், மனைவியை விட்டு அவர் பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வரும் சூழல், சிறுமியிடம் அவர் ஏற்கனவே பேசியதை சிலர் பார்த்த விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போலீசார் அவரை குறி வைத்து மடக்கி பிடித்து கைது செய்ததாக தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Share.

About Author

Leave A Reply