திருமணமாகி 9 வருடங்கள்! இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்து மகிழ்ச்சியில் நடிகை!

Google+ Pinterest LinkedIn Tumblr +

ரஜினி நடிப்பில் உருவான படம் பாபா. அந்தப் படத்தில் நடித்த மனிஷா கொய்ராலாவின் சகோதரியாக நடித்தவர் சந்தோஷி. அவர், ஜெய், பாலா, ஆசை ஆசையாய் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி அறிமுகம் ஆன உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

தொடர்ச்சியான பட வாய்ப்புகள் இல்லாததால், சின்னத் திரைப் பக்கம் ஒதுங்கினார். அரசி, இளவரசி மற்றும் மரகத வீணை உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானார். சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் தற்போது இரட்டை பெண் குழந்தை பிறந்திருக்கிறது. சிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும்; குழந்தைகளும் நலமாக இருக்கின்றன என, ஸ்ரீகர் சந்தோஷமாக தெரிவித்திருக்கிறார்.

Share.

About Author

Leave A Reply