நான் விவகாரத்து கொடுக்கமாட்டேன்! நீதிவேண்டும்! கதறும் வனிதாவின் மூன்றாம் கணவரின் முதல் மனைவி!

நான் விவகாரத்து கொடுக்கமாட்டேன்! எனக்கு நீதி வேண்டும் என் கணவனை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று கதறும் வனிதா விஜயகுமாரின் மூன்றாம் கணவரின் முதல் மனைவி.

 

பிரபல திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பல சர்ச்சைகளை கிளைப்பியது. இந்நிலையில், அவரின் முதல் மனைவி இதற்கு எல்லாம் காரணம் வனிதா தான் என்றும் அவள் தான் எல்லாமே என்று  ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் தற்போது மிகுந்த சர்ச்சையை கிளப்பி இருகின்றது.

 

இவர்களின் திருமணம் முடிந்த அடுத்த நாளே, பீட்டர் பாலின் முதல் மனைவி காவல் நிலையத்திற்கு சென்று பீட்டர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் பீட்டர் தன்னை விவகாரத்து செய்யாமல், வனிதாவை திருமண்ம செய்து கொண்டுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார். வனிதாவிடம் இது குறித்து கேட்ட போது, அவர் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார் என்றும் 8 வருடத்திற்கு முன்னரே இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிவித்தார்.

 

இதையடுத்த் தற்போது அவரின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிப்பது என்னவென்றால்,இவர்களுக்கு திருமணம் 2000-ஆம் ஆண்டு நடந்ததாகவும், எங்களுக்கு ஜான் எட்வார் என்ற பையனும், 3-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, எல்லாருடைய வீட்டில் நடக்கும் பிரச்சனை போலவும் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை இருந்தாகவும் அதனால் பிரிந்து இருந்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வனிதாவுக்கும், என்னுடைய கணவருக்கும் திருமணம் என்ற விஷயத்தை கேள்வி பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். விஷயம் தெரிந்த உடனே, அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வடபழனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

இதற்கிடையில், பீட்டரின் முதல் மனைவின் அம்மா மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே, என்று பீட்டரிடம் பேசிய போது, அவர் என் மகளுக்கு 25 சவரன் நகை, இரண்டு பிள்ளைகளுக்கும் தல 5 லட்சம் மொத்தம் 10 லட்சம் கொடு என்று கோபத்தில் பேசியுள்ளார். இதை ரெக்கார்ட் செய்த பீட்டர், காவல்நிலையத்தில், அந்த ரெக்கார்ட்டை போட்டு காண்பித்தார். அதுமட்டுமின்றி என் மகனை வனிதா மற்றும் பீட்டர் பால் இருவரும் அழைத்து பேசியுள்ளனர்.

இதனால் காவல் நிலையத்தில், இவர்களின் கோரிக்கையை எடுத்து கொள்ளவில்லை. மேலும், பணம் மற்றும் பிரபலமாக இருப்பவர் சொல்பது தான் சட்டம் கேட்கிறது. என்னை போன்று சாதாரண மனிதர்கள் கூறுவது என்றும் நீதி தேவதைக்கு கேட்கவில்லை என்று கதறும் பீட்டரின் முதல் மனைவி. எனக்கு நீதி வேண்டும் என்று தொடர்ந்து கதறி கொண்டு இருகிறார் அவரது மனைவி.

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept