அபிராமியுடன் ஊர்சுற்றும் முகின் !! தற்போது எங்கே இருக்கிறாங்க தெரியுமா ?? வைரலாகும் புகைப்படம் !!

0

பிக்பாஸ் போட்டி நிறைவு பெற்று மூன்று நாட்களாகிறது. இன்னும் பிக்பாஸ் ஷோவை பற்றியே சிலர் பேசிகொண்டுள்ளனர். முக்கியமாக இரவு 9 மணிக்கு மேலானால் சிலர் பிக்பாஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது பிக்பாஸ் முடிந்ததால் டிவி பார்ப்பதையே நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பிக்பாஸ் ஷோ ரசிகர்களின் மனதில் நிலைத்துள்ளது.

பிக்பாஸ் பட்டத்தை வெல்லா விட்டாலும், எங்கள் மனதை வென்றவர்கள் கவினும், லொஸ்லியாவும் தான் என அவர்களுக்கு ஆதரவாக டுவிட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.நேற்று கூட #PeoplesFavouriteKaviliya என்ற ஹேஷ்டாக் டிரெண்டானது, இதில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான டுவிட்டுகள் பகிரப்பட்டது.

முகேன், அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள் ஒற்றுமையாகவே இருந்து வந்தனர். இடையில் வனிதா உள்ளே சென்று அபிராமியை தூண்டிவிட்டு இருவரும் பயங்கர சண்டையினையும் போட்டுக்கொண்டனர்.பின்பு அபிராமி வெளியே சென்றதும் முகேன் அவரது உடைந்த மெடலை ஒட்டவைத்திருந்தார்.

அபிராமி முகேனை காதலித்து வந்தாலும் முகேன் தோழனாகவே இருந்து வந்தான். இந்நிலையில் முகேனுடன் செல்பி எடுத்தது மட்டுமின்றி நேற்று சாண்டியின் வீட்டிற்குச் சென்று லாலாவுடன் அவர்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்திய காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Share.

About Author

Leave A Reply