பிரபல நடிகையை ஏமாற்றிய கும்பல்! பெண் பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! நூல் இழையில் தப்பித்த கேரள நடிகை!

பிரபல தமிழ் படங்களில் நடித்த நடிகையை திருமணம் செய்ய போவதாக கோடீஸ்வர மாப்பிள்ளையாக நடித்து நடிகையை ஏமாற்றிய கும்பல் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆடு புலி, தகராறு போன்ற தமிழ் படங்களில் நடித்த பூர்ணாவின் சொந்த ஊர் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லம் மரட் பகுதியாகும். இவர் சில தினங்களுக்கு முன்பு ஒரு கும்பல் பெரிய கோடீஸ்வரர்கள் மற்றும் நல்ல குடும்பத்தார் என தன்னை அடையாளம் காட்டி கொண்டு பூர்ணாவின் வீட்டிற்கு சென்று பூர்ணா வீட்டுக்கு பெண் கேட்டு வந்துள்ளார்கள். அப்போது தான் இந்த கும்பல் போலி என்று பூர்ணாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் அவர்களை விசாரணையும் செய்ய தொடங்கினர். விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்ததுள்ளது.

காவல் துறையினர் விசாரணையில், முதன் முதலில் அந்த கும்பல் பூர்ணாவிற்கு டிக் டாக்கில் அன்வர் என்ற பெயரில் அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் இருவரும் நணபர்களாக பழகி வந்துள்ளனர். இதற்கிடையில், அன்வர் தன்னை கோடீஸ்வரர் போல அடையாளம் காட்டி தனக்கு துபாயிலும், கோழிக்கோட்டிலும் பெரிய நகைக்கடைகள் இருப்பது போல் தெரிவித்து பூர்ணாவை நம்ப வைத்துள்ளார்.

இந்நிலையில், பூர்ணாவை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி உள்ளார். இதனை நம்பிய நடிகை பூர்ணா, அவர் குடும்பத்தாரை தனது வீட்டுக்கு பூர்ணா வர சொன்னார். பின்னர் தான் தெரிய வந்தது அது போலி கும்பல் என்று.
இதனை குறித்து பூர்ணா தரப்பில் தெரிவித்தது என்னவென்றால், அன்வர் என்ற பெயரில் பேசியவரின் பெயர் ரபிக் எனவும், துபாயில் நடக்கும் தொழிலுக்கு பணம் தேவைப்படுவதாக பூர்ணாவிடம் ரூ 10 லட்சம் ரபிக் கேட்டார். இதனையடுத்து பூர்ணாவிற்கு சந்தேகம் எழுந்தது. பின்னர் அவரின் கும்பல் மிரட்டல் விடுத்த நிலையிலேயே புகார் அளித்துள்ளார் பூர்ணா.

மேலும், விசாரணையில், அவர்கள் வீட்டில் வந்து தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. வீட்டில் அப்போது நிறைய பேர் இருந்ததால் அவர்கள் தாக்கும் திட்டத்தைக் கைவிட்டிருக்கலாம் என பூர்ணா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த கும்பல் காவல்துறையினர் விசாரணையில் உள்ளனர். இந்த சம்பவம் திரை உலகத்தினரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept