Connect with us

Tamil Cinema News | Daily updates

ராமராஜன் இரண்டாவது மனைவி | நடிகர் ராமராஜனுக்கு இரண்டாம் திருமணமா | Ramarajan Second Wife

Ramarajan Second Wife

Cinema

ராமராஜன் இரண்டாவது மனைவி | நடிகர் ராமராஜனுக்கு இரண்டாம் திருமணமா | Ramarajan Second Wife

Ramarajan Second Wife

கரகாட்டக்காரன் படத்திலிருந்து மாங்குயிலே பூங்குயிலே பாடல் இப்போது வரையிலும் நம் மனதில் இடம்பிடித்துள்ளது என்றால், அதற்கு காரணம் நடிகர் ராமராஜன் தான். ராமராஜன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். அவர் எப்போதும் கிராமம் சார்ந்த படங்களில் நடிப்பதில் தான் விரும்பினார். அந்த காலத்தில் மக்கள், இவரை மக்கள் நாயகன் என்றும் அழைத்தனர்.

Ramarajan Karakattakaran

ராமராஜன்

ராமராஜன் தனது படங்களில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடித்ததில்லை. இதற்குக் காரணம், அதே கொள்கைகளைக் கொண்ட நடிகர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரனின் தீவிர ரசிகர். மேலும், அவரது படங்கள் எதுவும் வயது வந்தோர் சான்றிதழ் பெறவில்லை, எனவே அவர் நடித்த படங்கள் எல்லாமே குடும்பம் பார்க்க ஏற்றது. ராமராஜன் நடிகை நளினியை திருமணம் செய்து, அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Ramarajan Nalini MGR

ராமராஜன் நளினி விவாகரத்து

ஆனால் 20 வருடங்கள் கழித்து விவாகரத்து செய்தனர். விவாகரத்துக்குப் பிறகு, நளினி தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சன் டிவியில் மிகவும் பிரபலமான கோலங்கள் சீரியலில் மாமியாராக நளினி நடித்துள்ளார். சமீப காலமாகவே இணையத்தில் ராமராஜன் இரண்டாம் மனைவி என்று பலரால் தேடப்பட்டு வருகிறது.

ராமராஜன் இரண்டாம் திருமணம்

61 வயதில் ராமராஜனுக்கு இரண்டாவது திருமணமா என்று பல யூடுயூப் சேனல்களில் இரண்டு ஆண்டுகளாகவே வீடியோக்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆனால் உண்மையில் அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்பது தான் உண்மை. ராமராஜன் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது அவருக்கு 63 வயது ஆகிறது, அதே சமயம் தற்போது மீண்டும் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

Ramarajan Latest Photo

அவரது மகள் திருமண விழாவில் அவருடைய விவாகரத்து பெற்ற மனைவி நளினியுடன் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வலம் வந்தன. இதை பார்த்த மக்கள், நளினி மற்றும் ராமராஜன் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். அவரது மகளும் எனக்கு இவர்கள் இருவரையும் பார்க்க சந்தோஷமாக உள்ளது என்று ஆனந்த கண்ணீர் விட்டார்.

என்னதான் விவாகரத்து ஆகியிருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒரு நல்ல பந்தம் இருந்துகொண்டு தான் இருக்கிறது. ராமராஜன் எம் ஜி ஆர் அவர்களின் தீவிர ரசிகர் என்பதால், அவரது திருமணத்திற்கு அவரை அழைத்திருந்தார். எம் ஜி ஆர் அவர்களும் ராமராஜன் திருமணத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ramarajan Latest Movie

Ramarajan Ilayaraja

Ramarajan Family Photo

Ramarajan Daughter Marriage

Ramarajan Nalini

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

Popular Posts

To Top